ஸ்மைல் ப்ளீஸ்!

ஸ்மைல் ப்ளீஸ்!
'

எப்படி இருந்த அரவிந்தசாமி...

 மணிரத்னத்தின் ‘ரோஜா’ வந்த புதிதில் பக்கத்து வீட்டு,எதிர்வீட்டு,தெருவில் இருந்த,சொந்தத்தில் இருந்த எல்லா அக்காக்களுக்குப் பிடித்த, நடிகைகளுக்குப் பிடித்த, அப்போதைய ஆன்ட்டிகளுக்குப் பிடித்த ஒருவர் இருந்தார் என்றால் அது அரவிந்தசாமிதான். பொதுவாக அரவிந்த் என்று அழைத்தால்தான் அது மாடர்ன் என்றிருந்த காலத்தில் சாமி சேர்த்தே அழைக்கப்பட்டும் கனவுக்கண்ணன் ஆக கோலோச்சியவர் அ.சாமி.


இவன் கிட்டே அப்படி என்னதான் இருக்கு என்று அத்தனை சின்ன வயசிலேயே என்னை எரிச்சல்பட வைத்தவர் அசாமி.ஒரு காலத்தில் நமக்கு வில்லனாய் இருந்ததால் இன்னிக்கு ஒரு வஞ்சப்புகழ்ச்சிப் பதிவு.

பொண்ணுக எப்ப பாரு அவனைப்பத்தியே பேசிக்கிட்டு…குமுதத்தில் ஒரு பேட்டியில் காலேஜ் பெண்கள் ‘கடவுள் நேரில் வந்தால்?’ என்றதுக்கு பதிலாக ‘எல்லா ஆண்களையும் அரவிந்தசாமி மாதிரி மாத்திவிடச் சொல்வோம்’ என்றார்கள் கோரஸாய். (கீழே உள்ள ஃபோட்டோவை  உடனே பார்க்கவேண்டாம் மெதுவாகப் பார்க்கவும்…)

‘பம்பாய்’ படம் வந்ததும் எங்கேயோ போனார். அப்படி ஒரு புகழ் கமலுக்குப் பின் இவருக்குத்தான் வந்தது.(கார்த்திக்கையும் சேர்ப்பார்கள் சிலர்). ஒரு வருஷத்துக்கு முன்பு கூட பெங்களூரில் ஒரு வட இந்தியன் என்னிடம் 'அதெப்படி அரவிந்தசாமி மட்டும் அப்படி ஒரு கலரில் ஸ்மார்ட்டாய் மதறாசிலேர்ந்து?' என்றான். பின்னர் என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அடிப்படையில் அவர் ஒரு பிஸினெஸ்மேன். அவர் ஆர்வம் அதிலேதான். அதனால்தான் சினிமாவில் அப்படி ஒரு புகழ் வந்தும் அதைத் தக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டேத்தியாய் அது ஒரு பொழுதுபோக்கு என்கிறமாதிரி சினிமாவை விட்டு விட்டுப் போகமுடிந்தது. இன்னொன்று இவர் action hero ஆகவெல்லாம் நடிக்கவில்லை. அதில் புகழ்பெற்றிருந்தால்தான் நீண்ட காலத்துக்கு வண்டி ஓட்ட முடியும் தமிழ் சினிமாவில்.
(டெல்லி குமார்)
அவர் வாழ்வில் சோகங்களும்,கோபங்களும் உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு. டி.வி. சீரியலில் நடிக்கிற ('மெட்டிஒலி' சீரியலில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக புழிஞ்சு புழிஞ்சு அழுவாரே!  -யம்மாடி...என்னால அஞ்சு பொண்ணுங்களை பெத்துக்கத்தான் முடிஞ்சது...!-'ரொம்ப கஸ்டப்பட்டிருக்காரு!') டெல்லி குமார்தான் இவரது பெற்ற அப்பா. ஆனால் இரணடு பேரும் சொல்லிக் கொள்வதில்லை. ஒரு தடவை கேட்டதுக்கு நிருபரிடம் ‘அதெல்லாம் இல்லை. என் அப்பா செத்துப் போயிட்டார்’ என்றார் அ.சாமி கோபமாக. செத்துப் போனதாக சொன்னது வளர்ப்பு அப்பாவை. சின்ன வயசிலேயே தத்துக் கொடுத்துவிட்டார்களாம்.

(ஹா...ஹா....ஹா....கடவுள் இருக்கான்டா கொமாரு! எத்தனை ஆம்பளைங்க வயத்தெரிச்சலோ!)

காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் அ.சாமி. மனைவி நல்ல தோழியா இருக்கணும் என்று சினிமாக்கள் வந்த நாட்களில் அப்படி எல்லாம் இல்லை. ஒரு பொண்ணு ஃப்ரெண்ட்லியா இருந்தா லவ் வராது என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதிரடியாக பேசுவதில் அஜீத்துக்கு முன்னே இவர்தான். சினிமாவில் இருக்கிற ஃபார்மாலிட்டீஸ் ஒத்து வராத மனுஷன். ஒருமுறை இளையராஜா ரெக்கார்டிங்கிற்கு வருகிறார்…இதோ வந்து விட்டார்…வந்தே விட்டார்…என்றதும் அனைவரும் அட்டேன்ஷனில் நிற்க, இவர் கையில் இருந்த சிகரெட்டை ஒரு இழு இழுத்து தூக்கிபோட்டுவிட்டு இளையராஜாவிடம் வணக்கம் சொன்னாராம்!

அண்மையில் விவாகரத்தும் வாங்கிவிட்டார் மனைவி காயத்ரியிடமிருந்து. ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியோ இல்லை பி.பி.ஓ கம்பெனியோ ஆரம்பித்து அதை விற்றும் விட்டார்.பிஸினஸ்..பிஸினஸ்…எப்போதும் பிஸினஸ் தான்.

இப்போ என்ன அவருக்கு என்கிறீர்களா?

இப்போது மணிரத்னத்தின் புதுப்படத்தில் நடிக்கப் போகிறார். நிச்சயம் கதாநாயகனாக அல்ல. ஏதோ ஒரு அப்பா கேரக்டராக இருக்கும். இன்னொரு படத்தில் வில்லனாகவும் நடிக்கப்போகிறாராம். நாப்பத்தாறு வயதாகிறது. பார்த்தால் சவுகார்பேட்டை சேட்டு மாதிரி இருக்கிறார். தலையில் இருக்கும் கொஞ்சம் முடியில் செம்பட்டை அடித்தால் ‘சமோசாவும் ஜிலேபியும்’ விற்கிற கடையின் வடக்கிந்தியக்கார ஓனர் மாதிரியும் தோன்றுவார்.

இவர் படத்தில் எனக்குப் பிடித்தது புதையல் என்ற படம். கொஞ்சம் வித்தியாசமான நடிப்பு அவருது இந்த படத்தில். பிடிக்காதது தாலாட்டு என்ற படம். இதில் முன்னது டி.வியில் நன்றாக ஓடியது. பின்னது தியேட்டரில் ஓடியது. இதையெல்லாம் பார்க்கும்போது கமலஹாசன் பிரமிக்கவைக்கிறார்.

இன்னும் தன் உடம்பை பார்த்துக் கொண்டு, மார்க்கெட்டை நிறுத்த தேவையான புத்தியை தீட்டிக்கொண்டு,புதிது புதிதாக சிட்டுக்களை ஜோடி சேர்த்துக் கொண்டு, அவர் முதல் கல்யாணம் பண்ணிய காலகட்டத்தில் பிறந்த குழந்தையுடன் இப்போ ஜோடியாக நடித்துக் கொண்டு, ஓடிக் கொண்டே இருப்பதில் சகலகலா வல்லவன்தான்.

ஒரு பழைய்ய்ய்ய ஜோக்;

கணவன் தந்தியடித்தான். வியாபாரம் முடிந்துவிட்டது. ஒரு நாள் முன்னதாகவே வருகிறேன் என்று. வந்தான். தன் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தான். அவன் மனைவி இன்னொருவனோடு இருப்பதைப்பார்த்து ஆத்திரமடைந்து வெளியே போனான்.

கடைவீதியில் மாமியாரை பார்த்தான். என்ன நடந்தது என்று சொன்னான். விவாகரத்து வழக்கு போடுகிறேன் என்றான்.

'எந்த நடவடிக்கை எடுக்கறதுக்கும் முன்னாலே என் மகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன்' அவள் கெஞ்சினாள். அவனும் தயக்கத்தோடு ஒப்புக் கொண்டான்.

ஒரு மணிநேரத்தில் மாமியார் வந்து சொன்னாள். 'எனக்குத் தெரியும் என் மகள் சரியான காரணம் வைத்திருப்பாள் என்று. உங்களோட தந்தி வந்து சேரலியாம்'

ரசித்த ட்வீட்(tweet).

@v2wit:  குரைக்கும் போதெல்லாம் என் வீட்டு நாயிடம் 'டோன்ட் மேக் நாய்ஸ்!' என்றேன்..இப்போது நிறுத்தி விட்டது - குட்டி போடுவதை!


போதிதர்மா - தியானம் - தியான் - ச்சான் - ஸென்

22 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

//நாப்பத்தாறு வயதாகிறது. பார்த்தால் சவுகார்பேட்டை சேட்டு மாதிரி இருக்கிறார். தலையில் இருக்கும் கொஞ்சம் முடியில் செம்பட்டை அடித்தால் ‘சமோசாவும் ஜிலேபியும்’ விற்கிற கடையின் வடக்கிந்தியக்கார ஓனர் மாதிரியும் தோன்றுவார்.//
செம நக்கல். சிரித்துக் கொண்டே தான் கருத்திடுகிறேன்.

வழக்கம் போல கலக்கல் பீரு ...

நாய்ஸ் ஜோக் சூப்பரோ சூப்பர். எப்போ அடுத்த நாட்டுப்புற கதை வரும்?

Vigna said...

ரொம்ப ரசிச்சு படிச்சேன்..நீங்க சொல்ற மாதிரி அவர் dream boy யா இருந்த காலகட்டத்தில் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்..அதனால் நன்றாக relate பண்ணி கொள்ள முடிந்தது.

Kumaran said...

இனிய வணக்கம் நண்பரே,
ரொம்ப ரசனையான பதிவு..மிகவும் ரசித்தேன்.அதுவும் எல்லோரும் பெரும்பலும் மறந்துவிட்ட கலர் அ.சாமியை பற்றி சில சுவையான தகவல்கள் புதிதாக இருந்தன.நல்ல பதிவு கூடவே அந்த ஜோக்ஸ் கலக்கல்.நன்றி.எழுதுங்கள் தொடர்ந்து.

Anonymous said...

good flow in your writing..

ராஜி said...

அ.சாமி மேல இருந்த கோவம் இப்போ போய்ட்டுதா?

Chilled beers said...

வருகைக்கு நன்றி!ஹாலிவுட் ரசிகன்,குமரன்,Vigna,& ராஜி.

//அ.சாமி மேல இருந்த கோவம் இப்போ போய்ட்டுதா?//

ம்...இப்ப கொஞ்சம் தேவலை...

Chilled beers said...

நான் இதிலே எழுதாம விட்டது 'சிகரெட் நல்லதா கெட்டதா' என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதைப் பற்றி! ;)

Anonymous said...

புதிது புதிதாக சிட்டுக்களை ஜோடி சேர்த்துக் கொண்டு>>

ithe thane rajniyum panraaru..

ஆரூர் மூனா செந்தில் said...

இந்த வரிசையில் அடுத்த பரிதாபத்துக்குரியவராக வரப்போகிறவர் மாதவன் தான். மணிரத்னத்திற்கு மட்டும் என்ன ராசியோ.

மாயன்:அகமும் புறமும் said...

நல்ல பதிவு. பழசை சுவையாக அசைபோடுகிறீர்கள். நல்ல flow.

உங்கள் நேரத்தை வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி? Time Management

சி.பி.செந்தில்குமார் said...

பாவம்யா நல்ல மனுஷன்

ராஜ நடராஜன் said...

ஆறடி அர்விந்த்சாமி படத்தை எங்கிருந்து புடிச்சீங்க!இந்தி சினிமாவுல 10 வயசுல வில்லனைப் பழிவாங்கவேண்டுமென்று நினைத்து 20 வருடங்கள் கழித்து பழி வாங்குற டெக்னிக்கா இருக்குதே:)

அர்விந்த்சாமி சினிமாவிலிருந்து காணாமல் போனது ஏதோ ஒரு நிகழ்ச்சியைத் தன் தலை,மூளைன்னு எடுத்து முன்னின்று நடத்தியும் ஓரத்துல உட்காரவச்சதுக்குப் பின்பு மாதிரி நினைவு.உண்மையான காரணங்கள் அவர் மட்டுமே அறிந்த ஒன்று.

pavala said...
This comment has been removed by the author.
SPGR. said...

same blood machi... ippo manasukku konjam aaruthala irukku...

Anonymous said...

//அர்விந்த்சாமி சினிமாவிலிருந்து காணாமல் போனது ஏதோ ஒரு நிகழ்ச்சியைத் தன் தலை,மூளைன்னு எடுத்து முன்னின்று நடத்தியும் ஓரத்துல உட்காரவச்சதுக்குப் பின்பு மாதிரி நினைவு.//

1998 கார்கில் போர்வீரர்களுக்கான திரையுலக நிதி திரட்டும் நிகழ்ச்சி?

Chilled beers said...

கருத்து சொன்னதுக்கு நன்றி!

ஆரூர் மூனா செந்தில்,
மாயன்,
ராஜ நடராஜன்,
சிபி,
pavala,
SPGR

Anonymous said...

வயசான என்ன , இப்பவும் அழகாதான் இருக்காரு. -

rameez said...

ipoa dhan yenakkum manasukku konjam aarudhalaa irukku..
Nandri thozharae...

சமுத்ரா said...

gud one:)

aravindasamy said...

alagan nee......

aravindasamy said...

alagan da nee........

Anonymous said...

he is always handsome

Post a Comment

'அனானி'யாகவாது உங்கள் கருத்தை பதிவு செய்யுங்க! ஸ்டிரிக்டா சொல்றேன்...கமென்ட்டுக்கு மாடரேஷனே கிடையாது!

நீங்கள் ரசிக்க....வாட்டர் கலர் பெயிண்டிங்

நீங்கள் ரசிக்க....வாட்டர் கலர் பெயிண்டிங்
வரைந்தவர் ; தமிழ்ப்பறவை@Tparavai
 
;